தொடை எடையை குறைக்க எளிதான வழி முறைகள்.. வாங்க பார்க்கலாம்..
ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் ஆரோக்கிய உணவை சாப்பிடாமல் இருப்பதே. தொப்பை, உடல் எடை குறைத்தல் போன்றவை பற்றி அதிகம் கேள்விபட்டு இருப்போம். ஆனால் தொடை கொழுப்பை குறைத்தல் என்பது பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையாகும். தொடையை மட்டும் குறைக்க எந்த வழியும் இல்லை. தொடையை குறைக்க வேண்டும் என்றால் முழு உடலையும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். சரி வாங்க தொடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..
ஏந்த உணவை சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை என்றால் உண்ண முடியாது.அது போல அதிக உப்பை உண்டாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.நிறைய உப்பை பயன்படுத்துவதால் உடலில் அதிக தண்ணீரை வெளிப்படுத்தும்.இந்த அளவற்ற தண்ணீரால் உடலின் வடிவத்தை மாற்றும்.அதே நேரத்தில் தொடையில் அதிக கொழுப்புகள் சேரும்.இதை தவிர்க்க உப்பை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடல் பயிற்சி செய்யும் போது அதனுடன் HIIT உடல் பயிற்சியை மேற்கொள்ளவும். இந்த உடற்பயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் செய்யலாம்.
இந்த உடல் பயிற்சி உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும் பொழுது உடல் எடையும் சேர்ந்து குறையும்.இதனை தினமும் வழக்கமாக்கி கொண்டால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். உணவை உண்ணும் பொழுது அதில் எவ்வகை சத்து உள்ளது என்பதை ஆராய்ந்து சாப்பிடவும்.அதுவும் தொடையை குறைக்க கவனம் செலுத்தி வருபவர்கள் புரதம் மற்றும் நார்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட பழகி கொள்ள வேண்டும்.இது போல் சாப்பிட்டால் தொடைகளில் கொழுப்பு குறைவதை சீக்கிரமே உணரலாம்.