தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
தேனில் அதிக அளவிலான சத்து உள்ளதால் முகம் மற்றும் உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தேனால் முகம் பொலிவு அடையுமா என்ற குழப்பம் எல்லார் மனதிலும் சுழண்டு கொண்டு இருக்கும். கவலை படாதிங்க. தேனில் இயற்கையாகவே சருமத்தை பாதுக்காக்கும் பண்பு உள்ளதால் முகம் வெண்மை அடையும். தேனில் ஆன்டிபாக்டீரியா உள்ளதால் உடலில் எந்த நோயும் வராமல் எதிர்த்து போராடுகிறது. சரி வாங்க தேனை எப்படி முகத்திற்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் முகத்தை நீரால் கழுவி தேனை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் கழித்த பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்னர் சருமத்தில் மொய்ஸ்ட்ரைரை பயன்படுத்த வேண்டும். ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் தேன் எடுத்து கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை நன்றாக சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த மாஸ்க் பயன்படுத்தும்போது கண்களுக்கு அருகில் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இதனை வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு ஆகியவை மறைந்து விடும். கருமை புள்ளிகள் நீங்க வேண்டுமானால் இந்த மாஸ்க்கை பயன்படுத்துங்கள். ஒரு பாத்திரத்தில் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொண்டு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முழுவதுமாக அழிந்து விடும். இது போன்ற ஆரோக்கிய மாஸ்க் அணிந்து முகத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.