ராமராகும் பிரபாஸுக்கு அம்மா யார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்குகிறார். ஆதிபுருஷ் படம் பற்றி கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ 400 கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இப்படியொரு அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 2020 இல் வெளியிடப்பட்டபோட்டது. கடந்த 2ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் பிரபாஸ் கலந்துகொண்டார். முன்னதாக பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்துகொண்டு நடித்த நிலையில் அதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு செல்வதற்கு முன் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பில் ஆர் கல்ந்துகொண்டிருக்கிறார். ஆதிபுருஷின் டைட்டில் சின்னத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிரபாஸ் இதனை அறிவித்தார்.
ஆதிபுருஷ் ஆரம்ப் என்று குறிப்பிடப்பட்டிருந்த அதில் ஆரம்ப் என்ற வார்த்தை படம் ஆரம்பித்ததை குறிப்பிட்டது. டி-சீரிஸின் சிஎம்டி பூஷன் குமாரால் தயாரிக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகானும் நடிக்கிறார். சயீப் அலிகான் இப்படத்தில் நடிப்பதுபற்றி கருத்து தெரிவித்தபோது, ராவணன் கதாப்பத்திரம் ஏற்கிறேன். அவனது செயலின் நியாயத்தை எனது கதாப்பாத்திரம் சித்தரிக்கும் என்றார். இந்த கருத்துக்கு இந்து அமைப்பினரும், பாஜகட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராவணன் ஒரு அரக்கன் அவன் செயல் எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது என்றனர் இதையடுத்து சயீப் அலிகான் தனது கருத்தை திரும்ப பெற்றதுடன் மன்னிப்பு கேட்டார். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைச் சுற்றியுள்ள ஆதிபுருஷ் படம் இந்திய காவியம் ராமயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. புராணங்களின் படி, ராமர் ஆதிபுருஷா என்றும் அழைக்கப்படுகிறார். ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படத்தில் லங்கேஷ் என்ற அரக்கன் ராவணனாக சயீப் அலிகான் நடிக்கிறார்.
ஹீரோயின் கதாபாத்திரத்தில் கிரித்தி சனோன் நடிப்பார் என்று தெரிகிறது. இப்படத்துக்கு அதிக பட்சமாக 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். படத்தின் பெரும் தொகை வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பத்துக்கு செலவிடப்பட உள்ளது. பல ஹாலிவுட் படங்களில் செய்வதுபோல் கிரீன் மேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதிபுருஷ் முழுவதுமாக படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தின் கிராபிக்ஸ் வேலை செய்வதற்காக அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்ற உள்ளதாக தெரிகிறது. இதில் பிரபாஸின் தாய் வேடத்தில் பாலிவுட்டின் எவர்கிரீன் கனவு கன்னி நடிகை ஹேமாமாலினி நடிக்க உள்ளராம். தென்னிந்திய படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்று ஒரு காலத்தில் சபதம் செய்து சென்றவர் கமல்ஹாசனின் ஹேராம் படத்திலும், தெலுங்கில் என்டி பாலகிருஷ்ணா தாயாக கவுதமி புத்திரா சட்கார்ணி படத்திலும் நடித்தார். ஆதிபுருஷ் படம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருக்கிறது.