தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் எண் 06091 மதுரையிலிருந்து 10 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.மற்றொரு சிறப்பு ரயில் எண் 06097 மதுரையிலிருந்து 11ஆம் தேதி வியாழன் அன்று காலை 06.45க்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06092 ராமேஸ்வரத்தில் இருந்து 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். மற்றொரு சிறப்பு ரயிலான வண்டி எண் 06098 ராமேஸ்வரத்தில் இருந்து 11ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.