பழனி பஞ்சாமிர்தம் இனி பார்சலில் வந்து சேரும்..
பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வாழும் முருக பக்தர்கள் இணையவழியில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வகையில் அஞ்சல் துறையினருடன், பழனி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒப்பந்தம் கையப்பமிடபட்டது. இன்று முதல் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாதம் பெற விரும்புவோர் 250 ரூபாய் செலுத்தி இணைய வழியிலும், அனைத்து தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 500 கிராம் பஞ்சாமிர்தம் ராஜ அலங்காரத்தில் உள்ள முருகன் படம் மற்றும் விபூதி பிரசாதம் அட்டைப் பெட்டியில் பாக்கிங் செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்டவரின் வீடுகளுக்கு அனுப்பப்படும் .இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இதற்காக முன் பதிவு செய்து கொள்ளலாம்.