சென்சார் மூலம் போதைப்பொருட்களை கண்டுபிடிக்கலாம்.. வருகிறது தென் கொரியா தொழில்நுட்பம்!
போதைப்பொருட்களை பயன்படுத்தினால் வியர்வை வழியாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை தென் கொரியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக யாரேனும், போதைப்பொருட்களை கண்டறிய ரத்தம், சிறுநீர் போன்ற மாதிரிகளை கொண்டு கண்டறியப்பபட்டு வருகிறது. இருப்பினும், இந்த பரிசோதனைகள் செய்ய ஆய்வங்கள் மற்றும் சில அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், தோலுடன் பொருத்தக்கூடிய ஒருவகை சென்சார் மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில், தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவர் ஹோ சாங் ஜுங் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சோதனையில் இருப்பதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
அந்த சென்சாரை நம் தோலில் பொருத்தினால், தோலில் உண்டாகும் வியர்வை மூலமே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டுபிடிக்க முடியும் என்றும் இதனால், மருத்துவ முறைகளை விடவும் மாறுபட்டது என்கின்றனர் மருத்துவக்குழுவினர்.