அடக்க ஒடுக்கம் போதும் இனி கவர்ச்சி அதிரடி. நீச்சல் உடையில் திணறடித்த நடிகை..
கோலிவுட்டிலும் சரி இன்னும் பிற திரையுலகிலும் சரி எண்ட்ரி தரும் சில நடிகைகள் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கின்றனர். ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு வாய்ப்பு டல்லடிக்கத் தொடங்கினால் ஆடை குறைப்பில் ஆழ்ந்து விடுகின்றனர். குடும்பபாங்கான வேடமெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இனி கமர்ஷியல் ஹீரோயினுக்கான கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்பதுபோல் தங்களது இணைய தள பக்கத்தில் கவர்ச்சி படங்கள் வெளியிட்டு தெறிக்க விடுகின்றனர்.
களவாணி படத்தில் பள்ளிக் கூட மாணவியாக நடித்து கவர்ந்த ஓவியா பின்னர் 90 எம் எல் அடல்ட் படத்தில் நடித்தார். அதே போல் சந்தானம் ஜோடியாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அறிமுகமானார் ஆஷ்னா சவேரி. பட வாய்ப்புகள் எதிர்பார்த்தளவுக்கு வராத நிலையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற அடல்ட் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பட்டய கிளப்பினார்.
இதுபோல் பல நடிகைகள் கவர்ச்சி தளத்துக்கு தங்களது பாணியை மாற்றிக் கொண்டனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் ராஷி கண்ணா. இவர், இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத் தமிழன் போன்ற படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்தார். தற்போது தனது பாணியைக் கவர்ச்சிக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பாக இவ்வளவு கவர்ச்சி காட்டியதில்லை என்றளவுக்கு தனது இணைய தள பக்கத்தில் பலகவர்ச்சியாக நீச்சல் உடையில் படங்கள் வெளியிட்டிருக்கிறார். தோழி ஒருவருடன் உல்லாசமாக நீந்தி மகிழ்ந்த ராஷி அவருடன் குறும்பு சேட்டைகளில் ஈடுபட்டார். அந்த படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.ராஷி கண்ணாவின் இந்த திடீர் கவர்ச்சியைக் கண்டு ரசிகர்கள் திணறிப்போயிருக்கிறார்கள்.
அவரது படத்துக்கு ஏகத்துக்கு லைக்ஸ் கொடுத்தும் கவர்ச்சி தேவதையே, கவர்ச்சி பாம், கவர்ச்சி குயின் என்று ஏகத்துக்கு கமெண்ட் பகிர்ந்திருக்கின்றனர். இத்தனை கவர்ச்சியாகப் படத்தில் உங்களைப் பார்ப்பது எப்போது என்று கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர்.ராஷிகண்ணாவுடன் இருக்கும் தோழி அவரது உடற்பயிற்சி யாளர். ராஷியை கச்சிதமான உடற்தோற்றத்துக்கு கொண்டு வர அவர் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த ஒரு வருட மாக ராதி கண்ணா சைவ உணவுக்கு மாறிவிட்டதால் அதில் சத்துள்ள உணவு முறை மேற்கொள்வதுபற்றியும் ராஷிக்கு அட்வைஸ் தந்து வருகிறார். அது நல்ல பலன் அளித்திருக்கிறது. கச்சிதமான உடற்தோற்றத்தை வெளிப் படுத்தவே ராஷி கண்ணாவின் இந்தி நீச்சல் உடை அவதாரமாம்.ராஷி கண்ணா தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை 3. ,மேதாவி, சைதான் கா பச்சா உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார்.