ஜோ ரூட்டுக்கு இந்தியா பரிசளிக்கும்.. மைக்கல் வாகன் டுவிட்டிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி!
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணியை கிண்ட செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் வாகனுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இதற்கிடையே, அந்தப் போட்டியில் தன்னுடைய 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள், கையெழுத்திட்ட ஜெர்சியை நாதன் லயனுக்கு பரிசளித்தனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும், இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின் முதல் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் வாகன், காபாவில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்பு நாதன் லயனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை 100-ஆவது டெஸ்டுக்காக பரிசளித்தனர். அதே, போல ஜோ ரூட்டுக்கும் தோல்விக்கு பின்பு ஜெர்சியை பரிசளித்திருக்கிறார்களா? இதுபோல எதாவது நிகழ்ந்ததா ? யாராவது அதனை உறுதிப்படுத்த முடியுமா? பதிவிட்டுள்ளார்.
இதனால், கடும் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மைக்கல் வாகனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பல கிரிக்கெட் ரசிகர்கள் பலர் முதல் போட்டியில்தான் தோற்று இருக்கிறோம். தொடரை வென்ற பின்பு இந்தியா ஜோ ரூட்டுக்கு பரிசளிக்கும் என தெரிவித்துள்ளனர்.