பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்திலிருந்து காலியாக உள்ள Dialysis Technician Grade II பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 20.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 292
கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களைப் படித்து இருக்க வேண்டும். அத்துடன் அரசு அல்லது அரசு அங்கிருந்து பெற்ற நிறுவனத்தில் ஒரு வருட டயாலிசிஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.20000
வயது: 18 முதல் 58 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ அருந்ததியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.
பொதுப் பிரிவினருக்கு ரூ.600.
தேர்ந்தெடுக்கும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணையம் மூலம் 20.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/02/Dialysis_Technician_Grade_II_Notification_06022021.pdf