பிரபல நடிகர் கோவையில் 40 நாள் முகாமிட திட்டம்..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். சன் டிவி கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.இப்படத்தையடுத்து அதே ஆண்டில் 'டாக்டர்' படத்தை நடித்து முடித்து வெளியிட எண்ணியிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் கொரோனா ஊரடங்கு அதைத் தடுத்துவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பே 5 மாதத்துக்கு மேல் தொடங்க முடியாமலிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் டாக்டர் மற்றும் சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான அயலான் படப்பிடிப்பு தொடங்கியது. டாக்டர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரியங்கா அருள் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக சிவகார்த்திகேயன் முடித்திருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு வித்தியாசமான படம் அயலான். சைன்ஸ் பிக்‌ஷன் கதையான இதனை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பையும் சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது புதிய படத்தைத் தொடங்குகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது, படத்திற்கு 'டான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல் என்ன வென்றால் கோவையில் 40 நாட்களுக்கு மேலாக சிவகார்த்திகேயன் 'டான்' படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் முதல் முறையாகக் கல்லூரி மாணவராக நடிக்கிறார். சுவாரஸ்யமாக, நிஜ வாழ்க்கையில் ஒரு பொறியாளராக இருக்கும் சிவா, ஒரு பொறியியலாளர் கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார்.சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கான இளம் தோற்றத்துக்கு மாற உடல் எடையை சில கிலோவைக் குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.முன்னதாக கோவையில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன் மேலும் அவர்கள் படப் பிடிப்புக்குச் சென்னையில் அப்பட பூஜை நடத்தவுள்ளது.

'டான்' குழு கோவையில் 40 நாட்களுக்கு மேல் படப் பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது, தங்களது படப் பிடிப்பை தலா 20 நாட்களுக்குப் பிரித்த இரண்டு கட்டமாக ஷூட்டிங் நடத்த உள்ளனர்.'டான்' படத்தில் பிரியங்கா அருள் மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார். எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தை எஸ்.கே. புரொடக்ஷன்ஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

More News >>