கணவரின் இச்சைக்கு நடிகை ஜீவிதா இளம் பெண்களை சப்ளை செய்தார் - அதிரும் டோலிவுட்
நடிகரும், இயக்குநருமான டாக்டர் ராஜசேகருக்கு, அவரது மனைவி ஜீவிதாவே இளம்பெண்களை பாலியல் ஆசைக்கு அனுப்பியதாக சமூக ஆர்வலர் சந்தியா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகம் பாலியல் குற்றச்சாட்டுகளால் திணறி வருகிறது. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி வந்தார்.
அதன்படி முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் தெரியும்படியான ஒரு புகைப்படத்தை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டார். தொடர்ந்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார்.
இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது. இதனையடுத்து தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறி சூட்டை கிளப்பினார்.
தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது டாக்டர் ராஜசேகரின் மனைவியான நடிகை ஜீவிதா தனது கணவர் இச்சையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், விடுதிகளில் தங்கியிருக்கும் இளம் பெண்களை குறி வைத்து அவர்களை தனது கணவரின் படுக்கையை பகிர வைத்துள்ளதாகவும் கூறி சந்தியா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com