தளபதி 65 படத்துக்கு போட்டோ ஷூட்.. மாஸ் தோற்றத்தில் விஜய்..
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் அவரது 64வது படமாக உருவானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஸ்டர்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியானது. லாக்டவுன் இருந்த சில நாடுகள் தவிர இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இப்படம் வெளியானது. மொத்தம் ரூ 250 கோடி வசூல் சாதனை படைத்தது. பின்னர் ஒடிடியிலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.விஜய் நடிக்கும் தளபதி 65 படம் தொடர்பாகப் பலவேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
முதலில் ஏ ஆர் .முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்கான சிக்னல்களையும் இயக்குனர் முருகதாஸ் வெளிப்படுத்தி வந்தார். மறுநாள் அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில் கதையில் சில மாற்றம் மற்றும் சம்பள விவகாரத்தில் பிரச்சனை ஏற்படவே அப்படம் டிராப் ஆனது. அடுத்து அட்லியே விஜய்யை இயக்குவார் பிகில்2ம் பாகமாக இது உருவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அட்லி இந்தியில் ஷாருக்கான் படம் இயக்கச் சென்றுவிட்டார். மகிழ் திருமேனி, மோகன் ராஜா, எஸ்,ஜே,சூர்யா பெயர்களும் விஜய்65 படம் இயக்குவதில் அடிபட்டது. கடைசியாக அந்த வாய்ப்பை நெல்சன் திலீப்குமார் தட்டிச் சென்றிருக்கிறார்.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதுடன் தற்போது சிவகார்த்திகேயன் இயக்கும் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்புக்கு முந்தய வேலைகளை நெல்சன் தொடங்கி இருக்கிறார்.தளபதி65 படத்தில் அராத்தான ஒரு அதிரடி லுக்கை விஜய்க்காக வடிவமைத்திருக்கிறாராம் இயக்குனர் நெல்சன். அதற்கான போட்டோ ஷூட் இன்று நடந்தது, இப்படத்தின் பூஜையின்போது விஜய் 65 பட லுக் வெளியாக உள்ளது. இது விஜய்க்கு மாஸ் லுக்காக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தன்னா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்கத் தொடங்கி வருகிறது.