எதிரிகளை பலமிழக்கச் செய்யும் விசித்திர யாகம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நிகும்பலா யாகம் என்ற யாகம் நடப்பது விளக்கம் நடைபெறும்.பெருமளவு மிளகாய் வற்றலை பயன்படுத்தி இந்த யாகம் நடத்தப்படும். இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் எதிரிகள் பலம் இழப்பார்கள் என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் நடந்த யாகத்தில் ஜெயலலிதா ஒரு முறை கலந்து கொண்டார்.
பஞ்சபாண்டவர்கள் தங்களுக்கு மீண்டும் ராஜ யோகம் கிடைக்க வேண்டி இந்த யாகத்தை நடத்தியாக புராண குறிப்புகள் உள்ளது.மிளகாய் வற்றலைக் கொண்டு யாகம் நடைபெறுகிறது. ஆனால் இந்த யாகத்தில் டன் கணக்கில் மிளகாய் வற்றலைக் கொட்டியும் கமறலோ நெடியோ ஏற்படுவதில்லை.
கடந்த 9 மாதங்களாகக் கொரானோ பரவல் காரணமாக இந்த யாகம் நடைபெறவில்லை.தற்போது கோவில்களில் வழிபாடு நடத்துவதற்கான தளர்வுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமாவாசை தினமான இன்று இவ்வாலயத்தில் மிளகாய்களைக் கொண்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது.இந்த யாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடந்த இந்த யாகத்தைக் காண ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்திருந்தனர்.