ஜிஎஸ்டி வரியில் முறைகேடு: அமைச்சர் உறவினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான அரசு ஒப்பந்தப் பணிகளை, எடுத்து மாவட்டம் முழுவதும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 650 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு பணிகளை இவர் ஒப்பந்தம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் நான்கு இடங்களை குவாரி நடத்திவருகிறார். அவர் அரசுக்கு முறையாக ஜி.எஸ்.டி வரிச்செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில், இன்று காலை ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு பிரிவினர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர். ஜி.எஸ்.டி வரி முறையாகக் கட்டாதது தொடர்பாக டி.கே.குமார்க்குச் சம்மன் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
அதே சமயம் இது சீவி சண்முகத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிறார்கள் சிலர் சசிகலா அதிமுகவிற்கு வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவர் சிவி சண்முகம். திரும்பிய நிலையில், அவர் அதிமுகவிற்குள் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வந்த சண்முகம், சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அலுவலகம் சென்று புகார் அளித்தார். தினகரனையும் சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம் என்றும் அதிரடியாகச் சொல்லியிருந்தார் . இவரது இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சோதனை நடவடிக்கை என்றும் சொல்லப்படுகிறது.