மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ரத்து செய்து உயர்நீதி மன்றம் உத்தரவு
மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டே பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது .எனவே இந்த தேர்தலை ரத்து செய்து நியாயமான தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் , லதா , வைரமணி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில் மதுரை ஆவினில் 17 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.இந்நிலையில் 13 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும் மற்ற வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தேர்தல் அலுவலர் அறிவித்தார்.இதனால் மதுரை ஆவின் இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர்கள் செயல்பட ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்திருந்தது இந்நிலையில் இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆவினில் இயக்குநர்களை , தேர்வு செய்யப் புதிதாக அறிவிப்பானை வெளியிடலாம் . இந்த தேர்தல் 3 மாதத்தில் தேர்தல் நடத்தவும் தேர்தல், வெளிப்படையாகவும் விதிமுறைப் படி நடத்தவும் உத்தரவிட்டனர்.