வீதியில் சுற்றிய வினோத மிருகம்... அச்சத்தில் பொதுமக்கள்!

அர்ஜென்டினாவின் சான்டா பெ நகரில் வலம் வந்த வினோத மிருகம் பொதுமக்களை பீதி அடைய செய்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அர்ஜென்டினா, சான்டா பெ நகரின் தெருவில் சுற்றி திரிந்த மிருகம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய் வடிவில் இருந்தது அந்த வினோத மிருகம். மேலும், பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இரண்டு நாய்களை கடித்து கொன்றதாக சொல்லப்படுகின்றது. இதன் உருவமானது ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தை போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் இருந்துள்ளது.

மேலும், இம்மிருகம் லத்தீன் காட்டுப்பகுதியில் இருக்கும் சுபாக்காப்ரா என்ற ஒரு வித உயிரினத்தை போன்ற ஒரு வாம்பயர் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.

அப்பகுதியில் சுற்றி திரிவது இந்த ஒரு மிருகம் மட்டுமா, அல்லது மேலும் சில மிருகங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதுடன், அந்த மிருகத்தைப் பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>