மீறினால் கைது நடவடிக்கை: இலங்கை காதலர் தினம் கொண்டாட்ட அந்நாட்டு அரசு தடை!
கொழும்பு: இலங்கை நாட்டில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு 2021-ல் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இளைஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், காதல் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் வட மாநிலங்களில் திகழந்துதான் வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், வரும் 14-ம் தேதி விதிமீறி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இலங்கை காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி, சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் அவ்வாறு செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் காதல்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது காதலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.