அயோத்தி ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.1,000 நன்கொடை வசூல்.. அறக்கட்டளை தகவல்!
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.1,000 நன்கொடை கிடைத்துள்ளதாக அறக்கட்டளை உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கட்டுவதற்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் நன்கொடை திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர். இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவர் மடாதிபதி விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.