கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் கடத்திய தங்கம் சிக்கியது

கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் உடலில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் 5 பயணிகளை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களை மெட்டல் டிடெக்டர் மூலமும், உடைமைகளைச் சோதனை செய்த போதும் தங்கம் சிக்கவில்லை. இருப்பினும் ஒரே ஒரு பயணி மட்டும் பதற்றமாக இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். அவரை தனியே அழைத்துச் சென்று மேற்கொண்ட சோதனையில், அந்த நபர் தங்கம் அடங்கிய 28 கேப்சூல்களை விழுங்கி கடத்தி வந்தது .

அதேபோல 5 பேரும் 6 கிலோ எடைக்கொண்ட பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 6. 6 கிலோ தங்கத்தை பல்வேறு வழிகளில் பிரித்தெடுத்ததில் 2.85 கோடி ரூபாய் மதிப்புடைய 24கேரட் 5. 7 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட 5 பயணிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேஸ்ட் வடிவத்தில் கெமிக்கல் கலந்து தங்கம் கடத்தி வரும் போது மெட்டல் டிடெக்டர் மற்றும் எக்ஸ் ரேவில் கண்டறிவதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலக்குடலில், பைகளில், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் மட்டுமே கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கேப்சூல் வடிவில் விழுங்கி தங்கம் கடத்தி வரப்பட்டது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>