கவர்ச்சி நடிகை சில்க் வேடத்தில் சர்ச்சை நடிகை..
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா 80, 90களில் கோலிவுட்டில் கலக்கியவர். அவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா படத்திலும் இடம் பிடித்திருந்தார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லா பெரிய நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.சில்க் ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக உருவானது, தி டர்ட்டி பிக்சர்ஸ் பெயரில் உருவான படத்தில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தார்.
இப்படத்தில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. கடந்த ஆண்டு சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் தமிழில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மற்றொரு படம் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாக உருவாகவிருக்கிறது. இதில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.ஸ்ரீரெட்டி தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அங்குள்ள பிரபல நடிகர், இயக்குனர்கள் சிலர் மீது கடுமையாக பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தான் சொன்ன குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திராவில் போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அகற்றி போராட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் சென்னைக்கு வந்து தங்கினார். இங்கிருந்த படியும் சிலர் மீது புகார் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.இன்று ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். இப்படத்தை மது இயக்குகிறார். இவர் ஒரு விளம்பர பட இயக்குனர் ஆவார். இதுபற்றி ஸ்ரீரெட்டி கூறும்போது,சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கிறேன். இதை நான் உங்களிடம் தான் சொல்ல வேண்டும், உங்களை விட்டால் வேறுயாரிடம் நான் சொல்வது. எனக்கு அம்மா, அப்ப எல்லாம் நீங்கள்தான் (ரசிகர்கள்) இப்படம் பிரச்சனை இல்லாமல் முடிந்து திரைக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.