மகளுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய 62 வயது தந்தை கைது
கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் உள்ள ராணுவ அகாடமியில் பணிபுரிந்து வந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஊருக்குத் திரும்பினார். சுலைமானுக்கு மொத்தம் மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் இரண்டு மனைவிகளை இவர் விவாகரத்து செய்து விட்டார். மூன்று மனைவிகள் மூலம் சுலைமானுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி மாணவியான தனது மகளுக்கு இவர் அமீரகத்திலிருந்தபோது அடிக்கடி செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.இதையடுத்து சுலைமானை அவரது மனைவி செல்போனில் அழைத்துக் கண்டித்துள்ளார். ஊருக்கு வந்த பின்னரும் அவர் தன்னுடைய மகளுக்கு அடிக்கடி செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து சுலைமானுக்கு எதிராக அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் சுலைமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.