நடிகையின் ஆடையை அவிழ்க்க கேட்ட இயக்குனர்.. சுயசரிதையில் ஹீரோயின் பரபரப்பு..
திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர். உலக அழகியாக தேர்வாகி பிறகு தமிழில் அறிமுகமாகி பாலிவுட் சென்று இன்று ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகை ஒருவர் ஆரம்பக்காலத்தில் தன்னை ஆடை அவிழ்த்து நடிக்கச் சொன்ன இயக்குனர் பற்றி வாழ்க்கை சரித்திர புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அது பரபரப்பாகி இருக்கிறது.
2000ம் ஆண்டு உலக அழகியாக தேர்வானவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் ஜோடியாகத் தமிழன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்தவர் பின்னர் இந்திக்குச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்ததுடன் இன்றைக்கு ஹாலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கிறார்.பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதி ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது திரையுலக பயணத்தின் பல விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி 9 அன்று அவரது சுயசரிதை வெளியானது. இது இணையத்தில் புயலைக் கிளப்பி இருக்கிறது.
சினிமா துறை பின்னணி எதுவும் இல்லாமல் ஒரு வெளி நபராக சினிமா துறைக்கு வந்தது, மிஸ் வேர்ல்டு ஆகத் தனது பயணம் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியது, பின்னர் ஹாலிவுட்டில் தனது பயணத்தை மேற்கொண்ட விதம் குறித்து அந்த புத்தகத்தில் விளக்கினார்.பிரியங்கா சோப்ராவை பலரும் ஆரம்பக்கட்டத்தில் பிளாஸ்டிக் சோப்ரா என்று கிண்டலாக அழைத்தனர். பிறகு இன ரீதியாக அவமானப்படுத்தப்பட்டார். பாலிவுட்டில் வாரிசு நட்சத்திரங்கள் ஒற்றுமையாக இருந்து வெளிநபர்களைப் புறக்கணிக்கும் போக்கு பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார். தனது சுயசரிதைக்கு அன்ஃபினிஷ்டு (முடிக்கப்படாதது) என்று டைட்டில் வைத்திருக்கிறார்.பாலிவுட்டில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு பயங்கரமான அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். தனி பாடல் ஒன்றுக்கு நடிக்க ஒப்பந்தமானார். அந்த பாடலை படமாக்கும் போது அந்த பட இயக்குனர், பிரியங்காவின் ஆடையை முழுவதுமாக அகற்றும்படி கேட்டார். அதற்கு பிரியங்கா உடன்படவில்லை, தோல் நிறத்துடன் பொருந்தக் கூடிய தோல் நிற டைட்டான உடையை அணிவதாக கூறினார்.
அதைக்கேட்டு மிகவும் கோபமடைந்த இயக்குனர் பிறகு காஸ்டியூ மரை அழைத்து, காட்சியின் போது பிரியங்கா அணிந்திருக்கும் உள்ளாடை வெளியில் பளிச்சென தெரியும்படி உடை இருக்க வேண்டும்என்று சொன்னார். அதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரியங்கா அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் உடை அணிந்தால்தான் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள் இது மிகவும் முக்கியமானது என்று பிரியங்காவிடம் விளக்கம் அளித்தார் இயக்குனர்.இந்த சம்பவத்தால் கோபமடைந்த பிரியங்கா அந்த படத்திலிருந்து வெளியேறினார், அந்த இயக்குனர் பின்னர் பிரியங்கா சோப்ரா நடிகர் சல்மான்கானுடன் நடித்த படத்தில் பணியாற்றினார். அப்போது பிரியங்காவின் கை ஓங்கி இருந்தது. அவர் தான் அந்த படத்தில் கதாநாயகி. அதில் சல்மான் கான் ஹீரோ. அவரிடம் தன்னை ஆடை அவிழ்க்கச் சொன்ன இயக்குனரின் செயல்பற்றி பிரியாங்கா தெரிவித்தர். முழு சம்பவத்தையும் அறிந்த சல்மான் அந்த இயக்குனரை அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கினார். இப்படி அந்த சம்பவம் பற்றி பிரியங்கா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோல் திரைப் பட வாழ்க்கையில்தான் அனுபவித்த மிகவும் கொடூரமான அனுபவங்களைச் சுயசரிதையில் விளக்கி இருக்கிறார். இந்த புத்தகம் நெட்டில் வைராகி வருகிறது.