மகாராஷ்டிராவிலும் முதல்வர் கவர்னர் மோதல்: கவர்னர் பயணிக்க தனி விமானம் மறுப்பு

முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது.டெல்லி, பாண்டிச்சேரி, அரசியல் ரீதியாக இந்த மோதல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த விட்டாலும் கூட இந்த மோதல்களால் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் கவர்னரான பகத் சிங் கோஷ்யாரி. மும்பையில் இருந்து டெஹ்ராடூனுக்கு அரசு விமானத்தில் செல்ல மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் விமானம் புறப்படவில்லை.

அதன்பின் விமானத்தில் ஏறி 15 நிமிடங்கள் ஆகியும் விமானம் புறப்படவில்லை. விமானியிடம் காரணம் கேட்டபோது தனக்கு விமானத்தை இயக்குவதற்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்று விமானி பதில் அளித்துள்ளார்.இதையடுத்து பயணிகள் விமானம் மூலம் கவர்னர் கோஷ்யாரி உத்தரகாண்டிற்கு சென்றார். கவர்னரின் இந்தப் பயணத் திட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்யப்பட்டு மாநில அரசின் தகவலுக்காக முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில்தான் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் இடையே முதன் முதலாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கொரோனா தளர்வு அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க முதல்வர் அனுமதி அளிக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டி கவர்னர் கோஷ்யாரி எழுதிய கடிதத்தில் இந்துத்துவாவின் வாக்காளர் ஒருவர் மதச்சார்பற்றவராக மாறிவிட்டார் என விமர்சனம் செய்தார்.இதைத் தொடர்ந்து படிப்படியாக பல்வேறு விஷயங்கள் இருக்கும் விஷயங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாகத் தான் கவர்னர் பயணம் செய்ய விமானம் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே இதில் அரசு விதிமுறைகள் எதுவும் இல்லை எல்லாம் முறைப்படி தான் நடந்திருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கிறார்.

More News >>