இன்ஸ்டாவில் 1.50 லட்சம் ஃபாலோவர்: கைகள் இல்லாமலே நடனம் ஆடி சாதனை படைக்கும் பிரேசில் சிறுமி

கைகள் இல்லாமலே நடனம் ஆடி 16 வயது சிறுமி உலகையை தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார். பிரேசிலிலுள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி விக்டோரியா ப்யூனோ, பிறவியிலேயே அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டு கைகள் இல்லாமல் பிறந்தார். கைகள் இல்லாத நிலையில், பெல்லரினா நடனக் கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். விக்டோரியாவின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய தாய் விக்டோரியாவை தனது 5 வயதில் நடனப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

நடனத்தின் மீது கொண்ட ஆர்வம் மற்றும் தனது தீவிர முயற்சியினால் விக்டோரியா சிறந்த பெல்லரினா நடனக் கலைஞராக தற்போது உருவெடித்துள்ளார். எந்த விமர்சனங்களையும் எடுத்து கொள்ளாத விக்டோரியா, தற்போது பிரேசிலில் மட்டுமின்றி உலகையே சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறார். நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்.

இது குறித்து விக்டோரியா கூறுகையில், என்னைப் பொருத்தவரை கைகள் என்பது உடலில் ஒரு சிறு அங்கம் தானே தவிர அது அடையாளம் இல்லை என்று தெரிவித்துள்ளார். விக்டோரியா குறித்து தாய் வாண்டா கூறுகையில், கைகள் இல்லாத விக்டோரியாவை பார்க்க, மக்கள் வீட்டின் முன் நிற்பார்கள், அவள் ஆடையைத் தூக்கி கைகளைப் பார்ப்பார்கள். அது மிக வேதனையாக இருக்கும் என்று தெரிவித்தார்.விக்டோரியா வளர்ப்புத் தந்தை கூறுகையில், என்னால் கைகளை கொண்டு செய்ய முடியாததைக் கால்களைக் கொண்டு செய்து முடிப்பார் என்று தெரிவித்தார். தனது நடனத்தின் மூலம் இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான ஃபாலோயர்ஸ்களை கொண்ட விக்டோரியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>