மொயின் அலீ, ஸ்டூவர்ட் பிராட் இன்.. ஆர்ச்சர் அவுட்.. இங்கிலாந்து அணியில் என்னென்ன மாற்றங்கள்?!
2-வது டெஸ்ட் போட்டியில் சில வீரர்கள் இருக்கமாட்டார்கள் என இங்கிலாந்து டெஸ்ட கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், நாளை நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில், ஆர்ச்சர், ஆண்டர்சன், பெஸ் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள். இது எங்களுக்கு பின்னடைவுதான் என்றாலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் உள்ளது. என்னவென்றால், ஜோப்ரா ஆர்ச்சர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார் என்றார்.
மேலும், டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் இல்லாதது வருத்தமாக இருந்தது. ஆனால் நாளைய டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நாளையப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் பெஸ் இடம்பெறமாட்டார், இது ஒரு கடினமான முடிவுதான். ஆண்டர்சன் கடைசி இரண்டுப் போட்டியிலும் பஙகேற்க வேண்டும் என்பதால்தான் இப்போதே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதன்படி, மொயின் அலீ, ஸ்டூவர்ட் பிராட், பென் போக்ஸ் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்
ஜோ ரூட்மொயின் அலிஸ்டூவர்ட் பிராட்ரோரி பர்ன்ஸ்பென் போக்ஸ்டான் லாரண்ஸ்ஜாக் லீச்ஒல்லி போப்டோம் சிப்லேபென் ஸ்டோக்ஸ்ஒல்லி ஸ்டோன்கிறிஸ் வோக்ஸ்