உடம்பு வலிகளை போக்க இந்த நீரை குடியுங்கள்.. உடனடி தீர்வு
வயதானவர்களுக்கு இடுப்பு, கை, கால் போன்ற வலிகள் ஏற்படும். இதனால் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. கவலை வேண்டாம் இந்த நீர் குடித்தால் வலிகள் எல்லாம் பறந்து விடும்.
தேவையான பொருள்கள்:-கருஞ்சீரகம் - 1கப்ஓமம் - 3/4 கப் சீரகம் 1/2 கப் தனியா - 1/2 கப் வெந்தயம் - 1/4 கப்
செய்முறை:-முதலில் தேவையான பொருள்கள்களை தனித்தனியாக வறுத்து ஒன்றாகக் கலந்து பொடியாக்கவும். ஒரு ஸ்பூன் பொடி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனவுடன் வடித்துத் தேவைப்பட்டால் பனஞ்சர்க்கரையை கலந்து பருகலாம். கை, கால், மூட்டு, முதுகு, போன்ற வலி எல்லாம் பறந்து போகும். தொடர்ந்து பயன்படுத்தவும்.