ஆலைகளில் விதிமீறல்.. அதிகாரிகளின் அலட்சியம்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாயின இடிபாடுகளுக்குள் சிக்கியும் தீக்காயமடைந்தும் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாயும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்து நடந்து பல்வேறு உயிர்களை ஆண்டுதோறும் பலியாகி வருவது வாடிக்கையாகி விட்டது.

இதனிடையே இந்த விபத்துக்கு விதி மீறல்களே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர்கள் நேரடியாக தொழில் நடத்தாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளை செய்து வருகின்றனர். இப்படி ஒப்பந்த அடிப்படையில் பட்டாசுகளை தயாரிப்பவர்கள் எந்த அனுபவமும் இல்லாமல் தொழிலில் ஈடுபடுகின்றனர் அவர்கள். உரிய விதிமுறைகளை பின்பற்றாதாலேயே இந்த விபத்துகள் நடக்கிறது. எனினும் இந்த விதிமுறை மீறல்கள் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாமல் விடுவதால்தான் விபத்துக்கள் இப்படி அடிக்கடி அரங்கேறுகிறது. அறை ஒன்றிற்கு நான்கு பேர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டும்.

தொழிலாளிகளுக்கு கையுறை வழங்க வேண்டும் என்பன போன்ற பட்டாசு ஆலை நடத்துவதற்கான எந்தவித விதிமுறைகளும் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் பின்பற்றுவதில்லை. மேலும் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடத்தப்படுவதால் குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவில் செய்ய வேண்டும் என்று அவசரகதியில் செய்யப்படுவதுமே விபத்துக்கு காரணமென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பாலும் அதிக வெப்பம் மற்றும் உராய்வு காரணமாகவே இத்தகைய விபத்துகள் நடக்கிறது. உயரே சென்று வெடிக்க கூடிய பேன்ஸி ரக பட்டாசுகள்தான் சமீபகால விபத்துகளுக்கு காரணம். இதில் பயன்படுத்தப்படும் மணிமருந்து என்று சொல்லப்படும் மருந்துகளை கலக்கும் போது அல்லது பட்டாசு குழாய்களில் அடைக்கும் போதுதான் வெடித்து விபத்து ஏற்படுகிறது. இன்று ஆப்படி ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்துதான் அடுத்தடுத்த அறைகளில் பரவி 15 பேரை காவு வாங்கி இருக்கிறது.

More News >>