உச்சநீதிமன்றத்தின் இணையத்தளத்தையே முடக்கிய ஹேக்கர்ஸ்!

நீதிபதி லோயா மரண வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக்கர்கலால் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு துறைகளின் இணையதளங்கள் அவ்வப்போது முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம், சிபிஐ இணையதளம், உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் உள்ளிட்ட இணையதளங்கள் ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.

இதனிடையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை இன்று காலையில் விசாரித்த நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு நீதி விசாரணையை கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தின் இணையதளம் ஹாக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. பிரேசில் மொழியில் ஹேக் செய்யப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்திற்கும் தொலை தொடர்பு அமைச்சக அதிகாரிகளுக்கும் இணையதளம் முடங்கியது குறித்து தகவல் அளித்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களை ஹேக்கர்கள் முடிக்கி இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் ஆதார் போன்ற தனிநபர் தகவல்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற மத்திய அரசின் விளக்கம் கேள்விக்குறிய ஒன்றாக மாறி உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News >>