நடிகரின் பயிற்சியாளரை காதலிக்கும் மகள்..
திரையுலகில் யாருக்கு எப்படி காதல் வரும் என்பதைக் கணிக்க முடிவதில்லை. உடன் நடிக்கும் நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை அல்லது நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை, இயக்குனருடன் காதல், தயாரிப்பாளருடன் காதல், உதவி இயக்குனருடன் காதல் எனப் பலவகையில் காதல் மலர்கிறது.இந்தி நடிகர் அமீர்கான். இவரது மகள் ஐரா கான். இவர் விரைவில் நடிக்க வரவுள்ளார். இதற்கிடையில் அவருக்கு பாய்ஃபிரண்ட்களுடன் டேட்டிங் செய்வதை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.
ஏற்கனவே மிஷால் க்ரிபாலினி என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அதுபற்றி அவர் வெளிப்படை யாக ஒப்புக்கொண்டிருந்தார். தற்போது அவரை ஓரம் கட்டி விட்டு புது பாய்பிரண்டை தேர்வு செய்திருக்கிறார். இது நட்பும் கடந்து காதலாக மாறி இருக்கிறது.ஐராவின் புதிய பாய்ஃபிரண்ட் பெயர் நுபுர் ஷிக்ஹரே. காதலர் தினத்தையொட்டி புதிய காதலனுக்கு டீ பார்ட்டி கொடுத்தார் ஐரா கான். பிறகு இன்ஸ்டாமிராம் பக்கத்தில் இருவரும் கட்டிப்பிடித்து ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் அமீர்கானின் பர்சனல் பயிற்சியாளர் நுபுர். அமீர்கானின் உடற்பயிற்சியாளரான இவர் அமீர்கான் எந்த வேடத்துக்கு எப்படி உடற்தோற்றத்தை பராமரிக்க வேண்டும் என்பதைக் கவனித்து பயிற்சி அளித்து வருகிறார். கடந்த தீபாவளி தினத்தில் நுபுர் ஜோடியாக ஐரவுடன் டேட்டிங் செய்ததுடன், பொது இடத்திலும் ஜோடியாகச் சுற்றி இருக்கிறார்.பாலிவுட்டில் இதேபோல் தற்போதைக்கு ரன்வீர் பூர்- அலியா பட், அர்ஜுன் கபூர் மலைகா அரோரா போன்று சில ஜோடிகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன, கோலிவுட்டிலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா டேட்டிங் செய்து வருகின்றனர்.