20 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் பிரபல நடிகை..
கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகள் ஒரு சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜீத்குமார் - ஷாலினி. அமர்க்களம் படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இந்த காதல் போன் வழியாக வளர்ந்து பிறகு திருமணத்தில் முடிந்தது.திருமணத்து பிறகு ஷாலினி நடிப்புக்கு முழுக்கு போட்டார். பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் கடைசியாக நடித்தார், சுமார் இருபது ஆண்டுகள் அவர் குடும்ப பொறுப்பையே மேற்கொண்டிருந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆனார். பிள்ளைகள் விவரம் தெரியும் அளவுக்கு வளர்ந்த நிலையில் ஷாலினி மீண்டும் நடிக்கத் தயாராகி இருக்கிறார்.
சமீபத்திய தகவல்களின் படி, மணிரத்னம் இயக்கும் சரித்திர நாவல் பொன்னியன் செல்வனில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் ஷாலினி நடிக்கிறார்.கடந்த ஆண்டு, மணிரத்னம் தனது கனவுத் திட்டமான பொன்னியன் செல்வன், விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோருடன் முக்கிய வேடங்களில் பணியாற்றத் தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தின் படப் பிடிப்பு ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப் பட்டது. ஊரடங்கு தடை நீங்கிய பிறகு இப்போது, ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மேலும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிய உள்ளது.
சமீபத்திய தகவல் என்னவென்றால், அஜித்தின் மனைவி ஷாலினி இந்த மாத இறுதியில் ஐதராபாத்திற்குப் பறக்கவுள்ளார். அவரது கதாபாத்திரம் ஒரு முக்கிய அம்சமாக இப்படத்தில் இருக்கும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.2001 ஆம் ஆண்டில் ஷாலினி நடிப்பிலிருந்து விலகினார், முக்கிய வேடத்தில் நடித்த பிரியாத வரம் வேண்டும் வெளியானது. இது ஷாலியின் ரீ எண்ட்ரியாக இருக்கும்.பொன்னியின் செல்வனின் தற்போதைய படப்பிடிப்பில் த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா, இப்படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.பொன்னியன் செல்வன் பல ஆண்டுகளாக மணி ரத்னத்தின் கனவுத் திட்டமாக இருந்து வருகிறது. கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதிய சரித்திர நாவலை அதே பெயரில் இயக்குகிறார். இப்படம் இரண்டு பகுதிகளாக உருவாகிறது. தற்போது தயாரிப்பில் உள்ள பகுதி இந்த ஆண்டில் திரையரங்குகளில் வரவுள்ளது. பொன்னியன் செல்வன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.