அஜீத் வசனம் சொல்லி ஆக்ரோஷம் காட்டிய கிரிக்கெட் வீரர்..
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஸ்ரீசாந்த். இவர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக் காரணமாக அணியிலிருந்து சிலவருடங்களுக்கு முன் நீக்கப்பட்டதுடன் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தேசிய, மாநில அளவிலான அணியில் விளையாட முடியவில்லை. ஐபி எல் தொடரில் ஸ்ரீசாந்த் ஏதாவது ஒரு அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பர்க்கப்பட்டது எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீசாந்த் இருந்து வருகிறார்.
ஆனால் ஐபிஎல் 292 கிரிக்கெட் வீரர் பட்டியலிலேயே அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றம் அளித்துள்ளது.சமீபத்தில் ஸ்ரீசாந்த் காரில் வெளியில் சென்றபோது அஜீத் நடித்த விவேகம் படத்திலிருந்து ஒரு வசனமும், பாடலும் வெளியிட்டுள்ளார். அதில், என் வாழ்க்கையில் நான் எனது ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்கியது என்ற வசனத்தை வெளியிட்டதுடன் நான் மீண்டும் திரும்ப வருவேன் என்ற ஆக்ரோஷமாக பேசிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் கேரளாவில் நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டு ஆடினார்.இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் மெசேஜாக ஸ்ரீசாந்த் பகிர்ந்திருக்கிறார். எல்லா தல ரசிகர்களுக்கும்.. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இதுவொரு ஆரம்பம்தான் எனக் குறிப்பிட்டு, நான் திரும்ப வருவேன் என்று குரல் கொடுக்கிறார்.அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் போலீஸ் அதிகாரி, பைக் ரேஸர் வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தில் ஹுமா குரோஷி, யோகிபாபு, சுமித்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஸ்ரீ சாந்துக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தியில் அக்சர் 2, கேபரெட் ஆகிய படங்களிலும் டீம்5 என்ற மலையாளம் மற்றும் கெம்பே கவுடா2 கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். அத்துடன் டிவி ஷோக்களிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.