அலெக்ஸா.. இந்தப் பாட்டை சேகருக்கு அனுப்பு... அசத்தும் அமேசான் செயலி
இந்தியாவில் அலெக்ஸா என்ற ஒலி வடிவ தகவல் பரிமாற்ற சேவையை அமேசான் நிறுவனம் துவக்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது.இளைஞர்கள் முதியவர் வரை தமது அன்றாட தேவைகளுக்கு அலெக்ஸாவின் ஏதாவது ஒரு சேவையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இதன் பயன்பாடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அலெக்ஸா எக்கோ சாதனத்தை அதிக அளவில் பயன்படுத்தும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
அலெக்ஸாவை பயன்படுத்துவோர் தற்போது தங்களுக்குப் பிடித்த பாடல்களை குரல் வழி கட்டளை மூலம் பிறருக்கு அனுப்பும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அலெக்ஸா செயலி மூலம் ஒருவர் தனக்குப் பிடித்த எந்த ஒரு பாடலையும் உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் நண்பரின் பெயரைச் சொல்லி, அலெக்ஸா, இந்த பாடலை சேகருக்கு அனுப்பு என்று மட்டும் சொன்னால் போதும் அடுத்த நொடியில் அந்த பாடல் சேகரை சென்றடைந்து விடும். அதேபோல் அந்த பாடல் குறித்து சேகர் கருத்து தெரிவிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒருவேளை சேகர் சந்தா செலுத்தவில்லை என்றாலும், கூட அவரால் நாம் அனுப்பிய பாடலை கேட்க முடியும். இந்த வசதி வெறும் ஆரம்பம் தான் . விரைவில் இன்னும் பல புதிய வசதிகள் அறிமுகப் படுத்தப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.