2ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா...இல்லையா..? குமுறும் பொருளாதார நிபுணர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏடிஎம்-கள் காலியாக இருப்பதும், 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு நிலவும் தட்டுப்பாடு குறித்தும் பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் திடீரென மத்தியப்பிரதேச மாநிலத்தில் முக்கிய நகரங்களில் மக்கள் ஏடிஎம் நிலையங்களில் பணம் இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் நாடு முழுவதும் 2ஆயிரம் ரூபாய் தாள்களின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது.

இதையடுத்து 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சகடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதா என்று நாட்டின் முக்கியப் பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொருளாதார சீர்கேடு குற்றச்சாட்டும் தற்போது ஆளும் பா.ஜ.க மீது சரமாரியாக சுமத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் மத்தியபிரதேச (பா.ஜ.க) முதல்வர், மத்திய அரசின் சிறந்த பொருளாதார நலத்திட்டங்களுக்கு கேடு விளைவிக்கும் நோக்கிலேயே 2ஆயிரம் ரூபாய் தாள்கள் பதுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

மத்தியபிரதேச முதல்வரின் குற்றச்சாட்டுக்கும் தற்போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எதிர்ப்பலை எழுந்துள்ளது. ஆனால், வழக்கம்போல் பதிலளிக்க வேண்டிய அத்தனை தரப்பினரும் மவுனவிரதம் மேற்கொண்டு வருவதால் இப்போதைய சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நமக்கு நாமே தெளிவுகொள்வோமாக!

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>