இனி பாஸ்டேக் கட்டாயம்.. வேற வழியே இல்லை...

இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயம் அமலாகிறது. இனி அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சுங்கச் சாவடிகளை அமைத்து மத்திய அரசு கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்காக பாஸ்டேக் எனப்படும் டிஜிடல் பேமெண்ட் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இதுவரை 70% வாகனங்களில் தான் பாஸ்டேக் பொருத்தப்பட்டுள்ளது. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டு்ம் இன்னும் பலர் பாஸ்டேக் வசதியை பெறவில்லை. எனவே இனி அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இனி பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு வழக்கமான கட்டணத்தை விட இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>