வங்கிகள் சொதப்பினால் என்ன? அஞ்சலகம் இருக்கிறதே..!

தேசிய வங்கிகளின் அதே சேவையை குளறுபடிகள் எதுவும் இதுவரையில் இல்லாத வகையில் சேவையளித்து வருகின்றன அஞ்சல் நிலையங்கள்.

வங்கிகளில் நீங்கள் மேற்கொள்ளும் சேமிப்புத் திட்டங்கள் என்றாலும் சரி, பணப் பரிமாற்ற சேவைகளாக இருந்தாலும் சரி, வங்கிகளைவிட அஞ்சலகங்கள் இச்சேவையை சற்று குளறுபடிகள் இல்லாமல் செய்து வருகின்றன.

மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை. 

இதேபோல் குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 

மேலும் வங்கிகளுக்கு உள்ளது போலவே பணப்பரிமாற்ற வசதிகளும் ஏ.டி.எம் கார்டு வசதியும் அஞ்சலகங்களிலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>