விஜயதேவர கொண்டா ரசிகையான தனுஷ் நடிகை..
ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஊரெல்லாம் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு நடிகைகளே ரசிகைகளாக உள்ளனர். அப்படியொரு அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் விஜயதேவரகொண்டா. தமிழில் இவர் நோட்டா படத்தில் நடித்தார். அதே சமயம் முன்னதாக அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் விஜயதேவரகொண்டாவை பிரபலமாக்கியது. அப்படத்துக்குப் பிறகு ரவுடி ஸ்டார் என்று ரசிகர்கள் அவரை அன்பாக அழைத்தனர். இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் ஆகி வெளி வந்தது. தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்ததுடன் அவரது அறிமுக படமாகவும் அமைந்தது.விஜய்தேவரகொண்டா அதன்பிறகு டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்தார். அப்படங்களும் வெற்றி பெற்றன.
இந்த படங்களுக்கு பிறகு விஜயதேவர கொண்டாவுடன் நடிகைகள் நடிக்கத் தாமாக முன்வந்து விருப்பம் தெரிவித்தனர்.பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர், கியரா அத்வானி போன்றவர்கள் விஜயதேவர கொண்டாவை புகழ்ந்ததுடன் அவருடன் இணைந்து நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அதேபோல் நடிகை தமன்னாவும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். தமன்னா முத்தம் கொடுத்து நடிப்பதில்லை ஆனால் விஜய தேவர கொண்டாவுக்கு தனது பாலிசியை தளர்த்திக்கொண்டு அவருக்கு முத்தம் கொடுத்து நடிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை சாரா அலிகான், தான் விஜயதேவர கொண்டாவின் ரசிகை எனத் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்த சாரா நெருக்கமாக நின்று செல்ஃபி படம் எடுத்துக் கொண்டார். அப்படத்தை ரசிகையின் தருணம் என்று தலைப்பிட்டு இணைய தள பக்கத்தில் பகிர்ந்தார்.சாரா அலிகான் தற்போது தனுஷ் நடிக்கும் இந்தி படம் அட்ரங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா அடுத்த ஆக்ஷன் ஹீரோ என்ற கட்டத்துக்கு தன்னை முன்னெடுத்திருக்கிறார். ஆக்ஷன் அதிரை இயக்குனர் புரி ஜெகநாத் இயக்கும் லைகர் என்ற படத்தில் விஜயதேவரகொண்டா ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்காக உடற்கட்டை ஏற்றி கட்டுமஸ்தாகி இருக்கிறார் விஜயதேவர கொண்டா. தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி லைகர் படம் திரைக்கு வரவுள்ளது.