மாற்று மொழியில் படம் இயக்கும் லிங்குசாமி..
கோலிவுட், டோலிவுட் திரையுலகம் தற்போது மிக நெருக்கமான உறவில் இருக்கிறது. தமிழ் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அது தவிர ரஜினிகாந்த கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் போன்ற சில ஹீரோக்கள் நடித்த படங்கள் தெலுங்கில் ஒரேநேரத்தில் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் கோலிவுட் இயக்குனர்கள் கவுதம் மேனன், மோகன்ராஜா, ஏ.அர்.முருகதாஸ் போன்ற சில இயக்குனர்கள் நேரடி தெலுங்கு படங்கள் இயக்குகின்றனர்.
தற்போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதேபோல் இயக்குனர் மோகன்ராஜா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது கோலிவுட் இயக்குனர் லிங்குசாமி நேரடி தெலுங்கு படம் இயக்குகிறார். தெலுங்கில் ஐ ஸ்மார்ட் படத்தில் நடித்தவர் ராம் பொத்னேனி. இவர் சமீபத்தில் வெளியிட்ட மெசேஜில் சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருக்க உள்ளேன் என்றதுடன் சமூக வலைத் தள பக்கத்திலிருந்தும் விலகி இருக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் இயக்குனர் லிங்குசாமி நடிகர் ராம் பொத்னேனி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ராம் பொத்னேனியை சந்தித்த லிங்குசாமி அவரிடம் புதுஸ்கிரிப்ட் சொல்லி நடிக்கச் சம்மதம் பெற்றிருக்கிறாராம். இது லிங்குசாமியின் முதல் தெலுங்கு படம் ஆகும் ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குவதாக் இருந்தது பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.