காதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா..
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அன்று முதல் காதல் பந்தம் பலமாகி லிவிங் டு கெதர் வாழ்கையில் வந்து நிற்கிறது. இருவரும் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.கடந்த 2 வருடமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகும் ஆனால் சில நாட்களில் அது அப்படியே மாயமாகி விடும். சுமார் 7 வருடமாக இப்படியாக இந்த காதல் தொடர்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிகள் கடந்த காலங்களில் அடிக்கடி வெளிநாடு சென்று சுற்றி வந்தனர். பிறகு இருவரும் பிரபல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். வருடக் கடைசியில் திருமணம் என்று மீண்டும் ஒரு கிசுகிசு பரவும் கூடவே நயன் தாரா 4 புதிய படங்களில் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வரும். படத்துக்கு சுமார் 4 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் யார்தான் வருமானத்தை விட்டுவிட்டு வருவார்கள்?நயன்தாரா இன்னும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் அவரது உறவு காதலாகவே நீடிக்கிறது. கொரோனா கால கட்ட தளர்வில் விக்னேஷ் சிவனை தன்விமானத்தில் கோவா அழைத்துச்சென்று அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இல்லற பந்தத்துக்குள் நுழையாமல் இன்னும் காதல் ஜோடி பறவைகளாக இவர்கள் சுற்றி வருகின்றனர். எந்த விழாவாக இருந்தாலும் இவர்களின் கொண்டாட்டத்துக்கு மட்டும் எண்டு கார்டெல்லாம் கிடையாது. எல்லா விழாவையும் கொண்டாடி படங்களைப் பகிர்வார்கள். நேற்று காதலர் தினம். நீண்ட நாள் காதல் ஜோடிகள் என்பதால் விழா கொண்டாடியதுடன் நயன் தாரா ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டார். நயன்தாரா சேலை அணிந்தும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்தும் இருக்கும் படத்துக்கு கேப்ஷனாக ஒவ்வொரு நாளும் காதலை கொண்டாடுவேம் (Celebrate Love Every Day) என்று அழகாக குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதாராபாத்தில் உள்ளார் நயன்தாரா. இவருடன் விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இது தவிர மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியுடன் கலந்துகொண்டு நயன்தாரா நடிக்கவிருக்கிறார். அடுத்து நெற்றிக்கண் பட பணி காத்திருக்கிறது.