பரபரப்பான கட்டத்தில் சென்னை டெஸ்ட் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது

சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.இந்தியா 2-வது இன்னிங்சில் இன்று 1 விக்கெட் இழப்புக்கு 54 என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கியது. ரோகித் சர்மாவும், புஜாராவும் நேற்று நன்றாக ஆடிக் கொண்டிருந்ததால் இன்றும் அதே ஆட்டம் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் காலையிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா அதே 7 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விராட் கோஹ்லி களமிறங்கினார். அடுத்த சில நிமிடமே ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய அதிரடி வீரர் ரிஷப் பந்தும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினார். அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கேப்டன் கோஹ்லியுடன் துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். வந்த வேகத்தில் அவர் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஆனால் அவரும் உடனே ஆட்டமிழந்தார்.ரகானே 10 ரன்கள் எடுத்த நிலையில் மோயின் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய அக்சர் பட்டேலும் விரைவிலேயே ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்களில் மோயின் அலியின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 106 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு கேப்டன் கோஹ்லியுடன் அஷ்வின் ஜோடி சேர்ந்துள்ளார்.

More News >>