அஷ்வின் அதிரடி ஆட்டம் உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள்
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.நேற்று இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கிய போது சுப்மான் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 42 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்தியாவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. புஜாரா அதே 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், ரிஷப் பந்த் 8 ரன்களிலும், துணை கேப்டன் ரகானே 10 ரன்களிலும், அக்சர் படேல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இந்தியா 106 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.இந்நிலையில் 7வது விக்கெட்டுக்கு கேப்டன் கோஹ்லியுடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இவர் வந்த வேகத்திலேயே அதிரடியாக ஆடினார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோஹ்லி 38 ரன்களுடனும், அஷ்வின் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அஷ்வின் தன்னுடைய 34 ரன்களில் 5 பவுண்டரிகள் விளாசினார். இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளனர். தற்போது இங்கிலாந்தை விட இந்தியா 351 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளையும், மோயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.