கோஹ்லி 62 ரன்களில் அவுட் இந்தியா 8வது விக்கெட்டை இழந்தது

இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய 54 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் இன்று காலை ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. புஜாரா நேற்றைய அதே 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், ரிஷப் பந்த் 8 ரன்களிலும், துணை கேப்டன் ரகானே 10 ரன்களிலும், அக்சர் படேல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியா 106 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 7வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோஹ்லியும், அஷ்வினும் சேர்ந்து சிறப்பாக ஆடி அணியின் ரன்களை மெதுவாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இருவரும் அரைசதம் அடித்து முன்னேறிக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்கள் எடுத்திருந்த போது மோயின் அலியின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்தது இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் 8வது விக்கெட்டுக்கு அஷ்வினுடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார் அவரும் வந்த வேகத்திலேயே 3 ரன்களில் மோயின் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 210 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9வது விக்கெட்டுக்கு அஷ்வினுடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கிடையே இந்தியா இங்கிலாந்தை விட 400 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

More News >>