விமான பயணம் மூலம் திருப்பதி தரிசனம் : புதிய திட்டம் அறிமுகம்

திருப்பதி கோயிலில் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதிலும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் நாள்தோறும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே இப்படி ஒரு பிழை செய்தால் சிறப்புத் தரிசன வசதியையும் சிலர் தர முடியாமல் போய் விடுகிறது .இதற்காகச் சுற்றுலா கழகம் பேருந்துகள் மூலமும் ஐஆர்சிடிசி ரயில்வே இணையதளம் மூலமும் சிறப்புத் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தளர்வைத் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த . ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் துவக்கியுள்ளது.தற்போது பாலாஜி தர்‌ஷன் என்ற பெயரில் விமான பயணம் மூலம் ஏழுமலையானைத் தரிசிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி டெல்லியில் இருந்து திருப்பதி வரை திருப்பதியில் இருந்து டெல்லி வரை இரு மார்க்கத்திலும் விமானக் கட்டணங்கள் தங்கும் விடுதி, உணவு, திருமலை, திருச்சானூர், காளஹஸ்தி கோவில் தரிசனக் கட்டணங்கள் ஆகியவற்றைக் கொண்ட பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஒரு நபருக்கு 16,535 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில கூடுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளைப் பயணிகள் விரும்பினால் அதற்காகக் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும்.டெல்லியில் இருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் இந்த தரிசன திட்ட விமானம் காலை 9.20 மணிக்குத் திருப்பதி வந்தடையும். அங்கிருந்து பயணிகள் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து காளஹஸ்தி, சந்திரகிரி கோட்டை, பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுச் சிறப்புத் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

பின்னர் இரவு திருப்பதி விடுதி அறையில் தங்கி மறுநாள் அதிகாலை திருமலைக்குச் சென்று ஏழுமலையானை விரைவு தரிசனத்தில் வழிபட ஏற்பாடு செய்யப்படும் அதன் பின்னர் திருப்பதியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

More News >>