உல்லாச கப்பலில் போதை மருந்து - கனடா பெண்ணுக்குச் சிறை
பெர்முடா, சிலி, ஈக்வெடார் மற்றும் கொலம்பியா போன்ற பல நாடுகளுக்கு உல்லாச கப்பலில் பயணம் மேற்கொண்டு, அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த கனடா தேசத்து பெண்கள், ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்பு படையினரின் சோதனையின்போது கைது செய்யப்பட்டனர்.
2016-ம் ஆண்டு சிட்னி துறைமுகத்தில் மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்தபோது, 95 கிலோ கோகெயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்த வழக்கில், "கடனை தீர்ப்பதற்காக அவர் போதை பொருளை கடத்தவில்லை. ஆடம்பரமாக வாழ்வதற்காக குற்றம் இழைத்துள்ளார். தாம் செய்வது தவறு என்று தெரிந்தே செய்துள்ளார்," என்று அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.
இக்குற்றத்திற்காக மெர்லினா ரோபெர்ஜ் என்னும் 24 வயது இளம்பெண்ணுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்ட அவர், பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் தான் இந்தக் காரியத்தை செய்து விட்டதாக கூறி கதறி அழுதார்.
இவரோடு சென்ற இன்னொரு பெண்ணான இஸபெல் லாகாஸுக்கு கடந்த நவம்பர் மாதம் இதே போன்ற தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரான ஆண்ட்ரே டாமினுக்கு இந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பு வழங்கப்படக்கூடும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com