64 எம்பி முதன்மை காமிரா... கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 முதல் விற்பனை
ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஸோமியின் மி10ஐ ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி நண்பகல் 12 முதல் இது சாம்சங் ஷாப், ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாக உள்ளது. அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500/- கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை : 6.7 அங்குலம் எஃப்எச்டி+; SAMOLED+ (2400X1080 பிக்ஸல்)இயக்கவேகம் : 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு : 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி 1டிபி வரை அதிகரிக்கலாம்)முன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி (குவாட் காமிரா)மாக்ரோ மோடு, லைவ் ஃபோகஸ் (போர்ட்ரைட்), நைட்மோடு, சூப்பர் ஸ்லோமோஷன், ஹைபர்லாஸ், சூப்பர் ஸ்டெடி, 4 கே(யூஎச்டி) வீடியோ ரெக்கார்டிங் ஆகிய அம்சங்கள் காமிராவில் உள்ளன.
பிராசஸர் : எக்ஸிநோஸ் 9825; 7 நானோமீட்டர் இயூவி; மாலி ஜி76 ஜிபியூஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐமின்கலம் : 7000 mAhசார்ஜிங் : 25W
சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி வேகம் கொண்ட சாதனம் ரூ.23,999/- விலையிலும், 8 ஜிபி வேகம் கொண்ட சாதனம் ரூ.25,999/- விலையிலும் கிடைக்கும்.