நடிகையுடன் குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரரால் பரபரப்பு..
கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் கடந்த சில வருடங்களாகத் தமிழ் மீது பற்று காட்டி வருகிறார். டிவிட்டரில் அடிக்கடி அவர் தமிழில் மெசேஜ் போட்டு அசரவைத்து வந்தார். தமிழ் மீதும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது பாசம் காட்டிய அந்த ஹர்பஹனுக்கும் தமிழ் திரையுலகம் பாசம் காட்டியது.ஹர்பஜன் சிங்கின் முதல் படம், ப்ரண்ட்ஷிப், இதில் பிக்பாஸ் பிரபலம் லோஸ்லியாவின் முதல்படம். இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களிடம் பரபரப்பு அலைகளை உருவாக்கி வருகிறது.
ப்ரண்டிஷ் படக்குழுவின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் கொரோனா ஊரடங்கு வந்ததால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பொறியியல் மாணவராக நடிக்கிறார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டார். படப்பிடிப்புக்கான விஷயங்கள் எந்த வேகத்தில் முன்னேறுகின்றன என்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஹர்பஜன் கூறினார்.
அவரது ட்வீட், “நட்பு திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடக்கிறது. ஒரு புதிய அவதாரத்தில் வித்தியாசமான பிட்சில் தியேட்டர்களில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த கோடைக்காலம் # நட்பு சம்மர் ராக். ” என ஹர்பஜன் குறிப்பிட்டார்.மேலும், ஒரு வேஷ்டி அணிந்து படப்பிடிப்பில் பங்கேற்றதை மிகவும் ரசித்ததாகவும், கோடைகாலத்தில் ஃப்ரண்ட்ஷிப் படம் வெளியாகும்போது பார்வையாளர்கள் தல அல்லது தளபதி திரைப்படத்தை ரசிப்பதுபோல இப்படத்தையும் கொண்டாட முடியும் என்றும் கூறினார்.
தமிழில் வெளியிட்ட டிவிட்டில் “தமிழனின் தாய்மடி #கீழடி #தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னை மடி! எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த கோடைகாலத்தில் நம்ம படம் #Friendship வருது #தளபதி #தல படம் மாதிரி நீங்கக் கொண்டாடலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.