திருமணமான 6 மாதத்தில் சந்தேகம்... மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது.சந்தேக நோய் தான் பலரது வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாகக் கணவன் மீது மனைவி சந்தேகப்படுவதும், மனைவி மீது கணவன் சந்தேகப்படுவதும் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்நிலையில் கேரளாவில் திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொடியத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷஹீர் (27). இவருக்கும் அருகே உள்ள செருவாடி என்ற பகுதியைச் சேர்ந்த முஹ்சிலா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஷஹீர் துபாயில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்குப் பின்னர் அவர் திரும்பிச் செல்லவில்லை. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே இவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடித்தது.மனைவி முஹ்சிலா மீது ஷஹீருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் முஹ்சிலா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதன் பின்னர் இரு வீட்டினரும் அவரை சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் முஹ்சிலா கணவன் வீட்டுக்குத் திரும்பினார். ஆனால் அதன் பின்னரும் ஷஹீரின் சந்தேகம் தீரவில்லை. இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஷஹீர் மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றார். இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று முஹ்சிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷஹீரை கைது செய்தனர். சந்தேகத்தால் மனைவியைக் கணவன் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>