வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நிறைவு : மார்ச் 31 வரை 10 ஆயிரம் அபராதம்

அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய் கால அவகாசம் நிறைவடைந்ததால் இன்று முதல் 10 ஆயிரம் ரூபாய் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை அபராதமின்றி தாக்கல் செய்வதற்குக் கடந்த நவம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர்அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளைத் தாக்கல் செய்ய வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 15-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, இன்று முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். இதுவும் வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரையே தாக்கல் செய்ய முடியும். அதற்குப் பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது என வருமான வரித்துறை திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.

More News >>