கள்ளத்தொடர்பால் நடந்த விபரீதம்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞன்..
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை செங்குன்றம்,பெரியார் நகரில் உள்ள அரிசி ஆலையில் ராகுலும் அவரது மனைவி பூஜாவும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர்கள். வேலைத்தேடி சென்னையில் குடிபெயர்ந்துள்ளனர். அதே அரிசி ஆலையில் கிருஷ்ணா என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணாவுக்கும் பூஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இதனை கண்டு பிடித்த ராகுல் பலமுறை பூஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நீ செய்த தவறை நான் மனபூர்வமாக மன்னித்து ஏற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மறுபடியும் அதே தவறை பூஜா செய்ததால் ஆத்திரம் அடைந்த ராகுல் யாரும் இல்லாத நேரம் பார்த்து கிருஷ்ணாவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து விட்டார். இந்த செய்தியை அறிந்து வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த கிருஷ்ணனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் மேல் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக போலீஸ் தேடி வருகின்றனர்..