உலக வர்த்தக அமைப்பின் தலைவரான முதல் ஆப்பிரிக்கர்.. நிகோஸி ஒகோன்ஜோவின் புதிய சாதனை!

ஜெனீவா: உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு மூலம் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 164 உறுப்பினர்களை கொண்ட உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன. புதிய தலைவர் போட்டியில், நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியங் -ஹீ ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக 66 வயதான நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் தலைவரான முதல் ஆப்பிரிக்கர் மற்றும் முதல் பெண் என்ற பெருமையை நிகோஸி ஒகோன்ஜோ இவீலா பெற்றுள்ளார். 164 நாடுகளுடைய பிரதிநிதிகளால் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்வான நிகோஸி ஒகோன்ஜோ இவீலா கூறுகையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாகிய பொருளாதாரம் மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என்றும் தெரிவித்துள்ளார்.

More News >>