பால் வியாபாரத்திற்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கிய மகாராஷ்டிரா விவசாயி!

பிவாண்டி: பால் விற்பனை செய்ய ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய மகாராஷ்டிரா விவசாயி செயல் உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியைச் சேர்ந்த விவசாயி ஜனார்த்தனர் போயர் என்பவர் விவசாயம், பால் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே, பால் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பஞ்சாப், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள உள்ளதால், ஜனார்த்தனன் தனக்கு என தனி ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ரூ.30 கோடி மதிப்பில் தனக்கென ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அடுத்த மாதம் இந்த ஹெலிகாப்டர் ஜனார்த்தனனிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தனக்கு 2.5 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருப்பதால், தனது வீட்டின் அருகே ஹெலிகாப்டருக்காக ஹெலிபேட் கட்டியுள்ளார். மேலும் பைலட் அறை, தொழில்நுட்ப அறை ஆகியவையும் தயார் செய்துள்ளார். மேலும், பார் உள்ளிட்ட பல்வேறு வசிதகளை ஏற்படுத்த உள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பிவாண்டி நகர் முக்கிய தொழிலதிபர்களை கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு நாட்டில் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் குடோன்கள் இருப்பதால் இது செல்வ செழிப்பான பகுதியாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் காடிலாக் கார் முதன்முதலில் பிவாண்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ங்கினார். இந்நிலையில், பிவாண்டி நகரில் பால் வியாபாரத்திற்காக விவசாயி ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>